ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானின் ஐ.நா. தூதர் முனீர் சுக்ரம் பேசினார்.
இதற்கு ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் மதுசூதன் பதிலடி கொடுத்தார்.
அவர் கூறும்போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு நிரந்தரப் பிரதிநிதி (பாகிஸ்தான் தூதர்) முன் வைத்து உள்ள தேவையற்ற மற்றும் வழக்கமான கருத்துக்களை நிராகரிக்க சிla விநாடிளுக்கு மேல் எடுத்துக்கொள்ள மாட்டேன்.
சர்வதேச கவனத்தை கவர பாகிஸ்தான், ஐ.நா. கூட்டங்களில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது என்றார்.