ரபாத்: மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொராக்கோவின் ஹை அட்லஸ் மலைகளை உலுக்கிய நிலநடுக்கம்தான் இந்த சேதத்திற்கு மிகப்பெரிய காரணம். அந்நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் இதுவும் ஒன்றாகும். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின் மையப்பகுதிக்கு மிக நெருக்கமான நகரமான மராகேஷில் இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அங்கே உள்ள வரலாற்று கட்டமைப்புகள் இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. பெரும்பாலான உயிரிழப்புகள் தெற்கே உள்ள அல்-ஹவுஸ் மற்றும் டாரூடன்ட் மாகாணங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கேதான் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தாமதம் ஏற்பட்டு உள்ளது.