Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ரத்தம் கசிந்த மூக்கில் குடியிருந்த 150 புழுக்கள்...அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்...வீடியோ வைரல்...
உலகச் செய்திகள்

ரத்தம் கசிந்த மூக்கில் குடியிருந்த 150 புழுக்கள்...அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக நீக்கிய மருத்துவர்கள்...வீடியோ வைரல்...

Share:

அமெரிக்கா, பிப்ரவரி 26 -

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிக்கும் நபர், கடந்த அக்டோபர் மாதம் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகம் முழுவதும் வீக்கம் இருந்ததுடன், மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் கசிந்துகொண்டே இருந்துள்ளது. அவரால் பேசக்கூடாத முடியாத நிலையில் இருந்த அவரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவரின் மூக்கின் அடி குழி பகுதியில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் அவரின் மூக்கின் குழியில் இருந்து சுமார் 150 புழுக்களை உயிருடன் தனித்தனியாக எடுத்துள்ளனர். அவரின் மூக்கின் குழியில் சரியாக மூளைக்கு மிக அருகில் அந்த புழுக்கள் குடியிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இதுகுறித்து பேசும்போது, ஒவ்வொரு புழுவும் ஒவ்வொரு அளவில் இருந்ததாகவும், அதில் பெரிய புழுக்கள் சுண்டு விரல் அளவு இருந்ததாகவும் தெரிவித்தார். அறுவை சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரின் மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து தங்களின் அனுபவங்களைப் பேசியுள்ளனர். மூக்கில் எப்படி 150 புழுக்கள் வரை உருவாகி இருக்கும் என்ற ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் வீடியோவிற்கு கமண்ட் செய்து வருகின்றனர்.

Related News