சிப்பாங், ஆகஸ்ட்.11-
வங்காளதேச அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள தலைமை ஆலோசகர் டாக்டர் முகமட் யூனுஸ், மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, வங்களாதேசத்தின் முதன்மை தலைவர் வருகை தந்துள்ளார்.
டாக்டர் முகமட் யூனுஸை ஏற்றி வந்த விமானம், இன்றிரவு 7.47 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.