Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ஏர் இந்தியா விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வரின் உடல் அடையாளம் காணப்பட்டது
உலகச் செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வரின் உடல் அடையாளம் காணப்பட்டது

Share:

ஆமதாபாத், ஜூன்.15-

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி அதனைத் தெரிவித்தார்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணிகள் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது.

600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தற்போது, உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

Related News