டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் 20 நாட்களாகத் தொடரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் விவகாரத்தில் உலக நாடுகள் இப்போது இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. மேற்குலக நாடுகள் முழுக்க முழுக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அதேநேரம் அரபு நாடுகள் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இதற்கிடையே ஜோர்டான் ராணி ரனியா அல் அப்துல்லா இந்த விவகாரத்தில் மேற்குலக நாடுகளைச் சாடியுள்ளார். மக்களைச் சுட்டுக் கொள்வதைத் தவறு எனச் சொல்லும் மேற்குலக நாடுகள், அவர்கள் மீது ஏவுகணைகளை வீசி கொல்வதைக் கண்டிக்கவில்லை என்று சாடியுள்ளார்.
இஸ்ரேல் விவகாரம்: இது இஸ்ரேல் விவகாரத்தை மத்திய கிழக்கு நாடுகள் எப்படிப் பார்க்கிறது.. மற்ற மேற்குலக நாடுகள் எப்படிப் பார்க்கிறது என்பதில் இருக்கும் வேறுபாட்டை நமக்கு உணர்த்துகிறது.. மேலும், இஸ்ரேல் நாட்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். இஸ்ரேலில் 64% மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் தொடர்ச்சியாக நடத்தி வரும் ஏவுகணை தாக்குதலே இதற்குக் காரணமாகும்.