பங்கோக், நவம்பர்.11-
தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் ஒரு மலேசியப் பிரஜை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கிளந்தான் கால்பந்தாட்ட வீரரின் சகோதரருக்கு எதிராகக் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Salip Samae என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த 27 வயது ஆடவரைக் கைது செய்ய தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக Narathiwat மாநில போலீஸ் தலைவர் மேஜர் ஜெனரல் Prayong Kotsakha தெரிவித்துள்ளார்.
Salip-ப்பும் அவரது சகோதரரும் ஒன்றாக இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்து போலீஸ் சந்தேகிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








