Jan 17, 2026
Thisaigal NewsYouTube
போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் - ஏராளமானோர் இறுதி அஞ்சலி
உலகச் செய்திகள்

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் - ஏராளமானோர் இறுதி அஞ்சலி

Share:

வத்திகன் சிட்டி, ஏப்ரல்.26-

கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ், வத்திகன் சிட்டியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கடந்த 3 நாட்களில் மட்டும் 2.5 லட்சம் பேர் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. அவரது விருப்பத்தின் படி எளிய முறையில் இறுதிச் சடங்கு நடந்தது.

பின்னர் புனித மேரி மேஜர் பேராலயத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட போப் பிரான்சிஸ் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இந்திய அதிபர் திரௌபதி முர்மு உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Related News