Oct 17, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்கா இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி
உலகச் செய்திகள்

அமெரிக்கா இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி

Share:

நியூயார்க், ஆகஸ்ட்.24-

நியூயார்க் நெடுஞ்சாலையில், இந்தியர் உள்ளிட்டோர் பயணித்த சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து பேர் பலியாகினர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி. இங்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நியூயார்க் நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. இதில், இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 54 சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

பபலோவிலிருந்து 45 கி.மீ., தொலைவில் நியூயார்க் நெடுஞ்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், ஐந்து பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related News