கோலாலம்பூர், நவம்பர்.27-
இந்தோனேசியா, வட சுமத்திராவில் மேற்குக்கரையோரப் பகுதியில் இன்று பிற்பகல் 12.56 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள், மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாக அது குறிப்பிட்டது. வடக்கில் 2.7 பாகையிலும், கிழக்கில் 95.9 பாகையிலும் அந்த நில நடுக்கம் 57 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அது தெரிவித்தது.
எனினும் இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கான சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.








