பாங்கோக், ஆகஸ்ட்.29-
தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatraவை அந்நாட்டு அரசமைப்பு நீதிமன்றம் இன்று நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது. கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையில் அவர் நெறிமுறை தவறி நடந்து கொண்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு பிரதமரின் கூட்டணி அரசுக்கும் அந்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்திற்கும் ஒரு பேரடி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.