ஆஸ்திரேலியாவில் ஆண்கள், ஓய்வு பெறும் வயதைக் கடந்தும், 70 வயதிற்கும் மேலாக வேலை செய்து வருவதாக சமீபத்திய ஆய்வுத் தகவல் கூறுகின்றது.
இதனால் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அவர்களை “வயதில்லாத தொழிலாளர்கள்” என்று பெயரிட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில், 70 வயதில் வேலை செய்பவர்கள் 10 பேரில் ஒருவரே இருந்தனர் என்றும், ஆனால் தற்போது, அது 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் KPMG என்ற ஓய்வூதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
அதே வேளையில், பெண்களும் இப்போது அதிக அளவில் பணியாற்றத் தொடங்கியுள்ளார்கள் என்றும், ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில், பெண்கள் பாதி அளவில் தான் உள்ளனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.