கோலாலம்பூர், அக்டோபர்.30-
கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இணையம் வழியாகக் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, மலேசியாவுடனான உறவை வலுப்படுத்தும் புதிய முயற்சிகளை இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு வழங்கப்படும் ஓசிஐ OCI ஆனது, தற்போது ஆறாம் தலைமுறை வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், இந்தியக் கல்வி மற்றும் அறக்கட்டளை நிதிக்கு, மேலும் 3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்து, வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








