உக்ரேன், அக்டோபர்.04-
கிழக்கு உக்ரேனில் நேற்று வெள்ளிக்கிழமை புகைப்படம் எடுக்கும் பணியில் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் அந்தோனி லல்லிகென், ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டின் ஹேன்ஸ் லுகாஸ் நிறுவனம் சார்பாக, கடுமையான போர் சூழல் நிலவி வரும் Druzhkivka என்ற நகரில் பணியாற்றி வந்த லல்லிகென், போர் சூழலைத் திறமையாகப் படம் பிடித்து வந்துள்ளார்.
அவரது புகைப்படங்கள் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், லல்லிகென் கொல்லப்பட்டதற்கு ஐரோப்பிய பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, பத்திரிக்கையாளர் என்ற தெளிவான அடையாளத்துடன் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்த லல்லிகென் மீது நடந்துள்ள இத்தாக்குதலுக்கு, பிரான்ஸ் பிரதமர் எம்மேனுவல் மெக்ரோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.