Jan 6, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டு
உலகச் செய்திகள்

வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டு

Share:

நியூயார்க், ஜனவரி.05-

அமெரிக்கச் சிறப்புப் படைகளால், வெனிசுலா நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட அந்நாட்டு அதிபர் Nicolás Maduro அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள நியூயார்க் கொண்டு வரப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமையன்று வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் Maduro-வும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டனர்.

Maduro மீது "போதைப்பொருள் பயங்கரவாதம்" போதைப்பொருள் கடத்தல் சதி மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ளது.

Maduro, கடந்த 25 ஆண்டுகளாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, டன் கணக்கிலான கோக்கைன் போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கடத்த சர்வதேச கடத்தல் கும்பல்களுடன் இணைந்து செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

நியூயார்க்கின் Brooklyn சிறையில் அடைக்கப்பட்டுள்ள Maduro , இன்று ஜனவரி 5 ஆம் தேதி திங்கட்கிழமை Manhattan Federal நீதிமன்றத்தில் முதன் முதலாக ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related News