Oct 20, 2025
Thisaigal NewsYouTube
எண்ணெய்க் கசிவு -கரையோர வர்த்தகங்களுக்குப் பெரும் இழப்பு
உலகச் செய்திகள்

எண்ணெய்க் கசிவு -கரையோர வர்த்தகங்களுக்குப் பெரும் இழப்பு

Share:

சிங்கப்பூர், ஜுன் 27-

சிங்கப்பூர்க் கடல் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால், கரையோர வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அவை பெரும் இழப்பைச் சந்தித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இழப்பீடு பெற நீண்ட காலம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நிறைவுபெற 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் அவை கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.அதுவரை நிலைமையைச் சமாளிக்க முடியுமா என்ற அச்சம் இருப்பதாய் வர்த்தகங்கள் பல தெரிவித்துள்ளன.

"COVID-19 நோய்ப்பரவலின்போது வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தற்போதைய நிலவரம் அதே போன்று உள்ளது. ஆனால் கரையோரத்தில் உள்ள வர்த்தகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன," என்று நீர் விளையாட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் சொன்னார்.

பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே எண்ணெய் கசிந்ததால் செந்தோசாவின் கடற்கரைகள் பாதிப்புக்குள்ளாயின.சம்பவம் நடந்து சுமார் இரண்டு வாரம் ஆகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசா உட்பட, தெற்குத் தீவுகளில் உள்ள வர்த்தகச் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Related News