Nov 15, 2025
Thisaigal NewsYouTube
ஸ்வீடனில் கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பரிதாப பலி
உலகச் செய்திகள்

ஸ்வீடனில் கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பரிதாப பலி

Share:

ஸ்டாக்ஹோம், நவம்பர்.15-

ஸ்வீடனில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்தியப் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அப்போது வேகமாக வந்த பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

பேருந்தில் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, பாலினம், வயது ஆகியவை குறித்து இதுவரை போலீசார் எதுவும் தெரிவிக்கவில்லை.

பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Related News