மாஸ்கோ, ஆகஸ்ட்.06-
ரஷ்யாவிற்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மாஸ்கோ சென்றடைந்தார். மாமன்னரின் சிறப்பு விமானம், நேற்று செவ்வாய்க்கிழமை மலேசிய நேரப்படி இரவு 7.20 மணியளவில் Vnukova 2 அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமான நிலையத்தில் மாமன்னருக்கு மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது. மாமன்னரை, ரஷ்யாவின் அறிவியல், உயர்க்கல்வி அமைச்சர் வாலெரி ஃபால்கோவ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உடன் செல்லும் இயக்குநர் Gearjiv Kuznetsov ஆகியோர் வரவேற்றனர்.
மாமன்னரின் இந்த ஆறு நாள் அதிகாரத்துவப் பயணத்தில் மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின், வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முகமட் ஸின் மற்றும் ரஷ்யாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ சியோங் லூன் லாய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.