Oct 19, 2025
Thisaigal NewsYouTube
"ஹமாஸ் போர் எப்போது தான் முடியும்.." ஒரே வரியில் இஸ்ரேல் சொன்ன பதில்! என்ன இப்படி சொல்லிட்டாங்க
உலகச் செய்திகள்

"ஹமாஸ் போர் எப்போது தான் முடியும்.." ஒரே வரியில் இஸ்ரேல் சொன்ன பதில்! என்ன இப்படி சொல்லிட்டாங்க

Share:

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்,

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.. முதலில் கடந்த அக, 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றன.

இதில் முதலில் சற்று தடுமாறினாலும் அதன் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.. ஹமாஸின் காசா பகுதியில் இறங்கிய இஸ்ரேல், தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்கா: இந்தப் போருக்குச் சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக மாறாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே அனைத்து நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்த பிறகே காசாவில் ஹமாஸுக்கு எதிரான இந்த போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியுள்ளார். வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் ஜபாலியா மற்றும் ஷேஜய்யா பட்டாலியன்கள் அழிக்கப்படும் விளிம்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related News