Apr 17, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக்கு ஒரு விமானம்.. வீதி முழுதும் பார்க்கிங் செய்யும் கிராம மக்கள்.. ஏன் வைத்திருக்கிறார்கள்?
உலகச் செய்திகள்

வீட்டுக்கு ஒரு விமானம்.. வீதி முழுதும் பார்க்கிங் செய்யும் கிராம மக்கள்.. ஏன் வைத்திருக்கிறார்கள்?

Share:

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்களாம்.அந்த காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடைகளாகவும் மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். நாளடைவில் பொது போக்குவரத்து, சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா, கார் என போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் இருந்த காலம் போய் டூவிலர்கள் வந்தன. தற்போது அவையும் போய் வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு காராவது இருக்கிறது. பக்கத்து கடைக்கு போக வேண்டுமானால் கூட காரில்தான் பயணிக்கிறார்கள்.

காற்று மாசு, போக்குவரத்து பாதிப்பு என இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே இடத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களில் வருகிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் இருக்கிறதாமே தெரியுமா? நிச்சயமாகத்தான் சொல்கிறோம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானங்களை பயன்படுத்துகிறார்களாம். இந்த கிராமத்தில் வேலைக்கு செல்லவும் அலுவலகத்திற்கு செல்லவும் விமானத்தில்தான் பயணிக்கிறார்களாம். அந்த தெருவை கழுகு பார்வையில் பார்த்தால் விமான நிலையம் போல் காட்சியளிக்கிறது.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!