Jan 17, 2026
Thisaigal NewsYouTube
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி
உலகச் செய்திகள்

பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி

Share:

லிமா, ஜூன்.16-

தென் அமெரிக்கா நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.1 எனப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரு நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. தலைநகர் லிமா அருகே உள்ள கால்லோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பலமாகக் குலுங்கின. லிமாவில் வீட்டு சுவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் ஐவர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகரின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் லிமாவில் நடைபெற்று வந்த கால்பந்து போட்டியொன்று நிறுத்தப்பட்டது.

Related News