Oct 28, 2025
Thisaigal NewsYouTube
வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி
உலகச் செய்திகள்

வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: பிரான்சில் இருவர் பலி

Share:

பாரிஸ், ஜூன்.01-

பாரிஸில் யுஏஃபா வெற்றியாளர் லீக் கால்பந்து வெற்றி கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மோதலில் இருவர் பலியானார்கள். மேலும் 192 பேர் காயமடைந்தனர். அச்சம்பவம் தொடர்பாக 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாட்டத்தில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியும், இத்தாலியின் இன்டர் மிலன் அணியும் மோதின. இதில் முதல் முறையாக பிஎஸ்ஜி வெற்றி பெற்றது. அதனை அடுத்து வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வன்முறை வெடித்தது. ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டு 192 பேர் காயமடைந்தனர்.

வன்முறையால் நூற்றுக்கணக்கான தீ விபத்துகள் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 22 பேரும், 7 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர். சாம்ப்ஸ் எலிசீஸில், பஸ் நிறுத்துமிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தடைகளைத் தாண்டி, குதித்ததால், அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் அடித்து போலீசார் சமாளித்தனர். இந்த வன்முறையில், இதுவரை 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News