Oct 17, 2025
Thisaigal NewsYouTube
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்: முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது- நாசா கூறுகிறது
உலகச் செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்: முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது- நாசா கூறுகிறது

Share:

வாஷிங்டன், செப்டம்பர்.12-

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்றும், அந்த கிரகத்தின் மின்காந்தப்புலம் அழிந்து போனதால், வளிமண்டலத்தின் அடர்த்தி குறைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், Perseverance rover விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான முக்கியமான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது.

சமீபத்தில் Perseverance rover சில பாறை மாதிரிகளைச் சேகரித்துள்ளது. இந்த பாறையானது, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு Jezero பள்ளத்தாக்கில் ஓடிய ஒரு மிகப் பெரிய ஆற்றின் அடிப்பகுதியில் இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து நாசாவின் நிர்வாகத் தலைவர் Sean Duffy கூறுகையில், இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான, புரட்சிகரமான ஆதாரம் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்கிறார்.

Related News

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்: முக்கியமான ஆதாரம் கிடைத்துள... | Thisaigal News