Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பொகட்டா, ஜூன்.08-

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் தாக்கம் உடனடியாக இருந்தது. கட்டடங்கள் அசைந்தன, சைரன்கள் ஒலித்தன, பீதியடைந்த குடியிருப்பாளர்கள் தெருக்களில் குவிந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →