Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த சிறுவன்
உலகச் செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த சிறுவன்

Share:

பாகிஸ்தான், மார்ச் 30-

பால்டிஸ்தானில் உள்ள கப்லு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகம்மது ஷிராஸ். இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். அவரது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமை 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் அந்த சிறுவன் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார். முகம்மது ஷிராஸ் தனது சகோதரி முஸ்கானுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிறுவன் முகம்மது ஷிராசை தனது நாற்காலியில் அமர வைத்த காட்சிகளும் உள்ளது. மேலும் சிறுவனுடன் பிரதமர் சிரித்து பேசி உரையாடிய காட்சிகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறுவன் ஷிராசிடம் எனது பெயர் என்ன? என்று விளையாட்டுத்தனமாக கேட்கிறார். அதற்கு ஷிராஸ், அப்பாவித்தனமாக 'ஷெபாஸ் ஷெரீப் மாமா' என்று கூறுகிறார்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

Related News