Oct 30, 2025
Thisaigal NewsYouTube
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உலகச் செய்திகள்

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Share:

புதுடெல்லி, ஜூன்.27-

டில்லி அனைத்துலக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி அனைத்துலக விமான நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில், டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்ட பேப்பர் ஒன்றை பணியாளர் ஒருவர் எடுத்துள்ளார்.

இதையடுத்து, டில்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடுத்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி எனத் தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News