வாஷிங்டன், ஆகஸ்ட்.18-
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. காயமுற்ற போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டுக் கலவரம் குறித்த புகாரை தொடர்ந்து, போலீசார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில், ஒரு போலீஸ் நாயும் காயம் அடைந்தது. அதிகாரிகள் சுடப்பட்ட பிறகு, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை ஆயுதத்தைக் கீழே போடுமாறு வற்புறுத்தினர். பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த நபரின் விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்காவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.