Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது
உலகச் செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது

Share:

புதுடெல்லி, ஜூன்.14

குஜராத், ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 பேராக அதிகரித்துள்ளது.

விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த வேளையில் அந்த விமானம் மோதிய மருத்துவர்கள் தங்கியிருந்த கட்டத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தரையில் உயிரிழந்த 33 பேரும், பிஜே ஆமதாபாத் மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த விமான விபத்து தொடர்பில் உயர் அளவிலான விசாரணைக் குழுவை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளது என்று ஹிண்டுஸ்தான் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

Related News