புதுடில்லி, செப்டம்பர்.10-
நேபாளத்திற்கான விமானச் சேவையை செப்டம்பர் 12 வரை தற்காலிகமாக நிறுத்தி, இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேப்பாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைத்தள சேவை நிறுத்தத்தை எதிர்த்து நடைபெற்று வரும் வன்முறை, போராட்டங்களால், அந்நாட்டின் பிரதமரும் அதிபரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அந்த நாட்டுக்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
நேபாளத்தில் நடைபெறும் போராட்டம் காரணமாக, இந்தியாவிலிருந்து காத்மாண்டுவிற்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. காத்மாண்டுவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் செப்டம்பர் 10ம் தேதி மதியம் 12:00 மணி வரை நிறுத்தப்படும்.
உங்கள் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டால், நீங்கள் மாற்று விமானத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது எங்கள் வலைத்தளம் மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம் என இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.