கெய்ரோ, செப்டம்பர்.19-
கெய்ரோ எகிப்திய அருங்காட்சியகத்தில் மாயமான விலைமதிப்பற்ற பழங்கால தங்க வளையல் ஒன்று, அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரால் 4000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக எகிப்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
3000 ஆண்டுகள் பழமையான அந்த வளையல், lapis lazuli மணிகளால் அலங்கரிக்கப்பட்டது என்பதோடு, எகிப்தின் 21வது வம்சத்தைச் சேர்ந்தது.
கடந்த வாரம் சனிக்கிழமை அருங்காட்சியகத்தில் உலோகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அது, மாயமானதாக ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து போலீஸ் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் அதனைத் திருடி, தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 4000 டாலருக்கு விற்பனை செய்துள்ளது கண்டறியப்பட்டது.