சான் சபாஸ்தியன், செப்டம்பர்.22-
புகழ்பெற்ற அமெரிக்க நடிகையான ஏஞ்சலினா ஜோலி, தனது சொந்த நாட்டை இனி அங்கீகரிக்கப் போவதில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அமெரிக்காவில் கருத்து சுதந்திரத்திற்காக ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆழ்ந்த கவலைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஸ்பெயினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவரிடம், அமெரிக்காவில் நிலவி வரும் கருத்துச் சுதந்திரம் பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடக விமர்சனங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையாண்டு வரும் அடக்குமுறைகள் தொடர்பாக ஏஞ்சலினா ஜோலியின் இக்கருத்து இருப்பதாக நம்பப்படுகின்றது.