Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

தாய் கண்டிப்பு: 20வது மாடியிலிருந்து குதித்து சிறுமி தற்கொலை

Share:

பெங்களூரு, பிப்.13-

பெங்களூருவில் கைப்பேசியில் விளையாடியதை தாய் கண்டித்ததை அடுத்து, 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில், 15 வயது சிறுமி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்டவர் 10ம் வகுப்பு மாணவி அவந்திகா என்பது தெரியவந்தது.

சிறுமி ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்திருக்கிறார். ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதும் தெரிய வந்துள்ளது. தேர்வு நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தியதால், தாய் கண்டித்ததை அடுத்து, கோபத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

சிறுமியின் குடும்பத்தினர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமியின் தந்தை ஒரு பொறியாளராக பணிபுரிகிறார். தாய் ஒரு இல்லத்தரசி என்பது விசாரணையில் தெரியவந்தது.

Related News