Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஓராண்டுக்கு வெளிநாட்டு உளவு கப்பல்களுக்கு இலங்கை தடை
உலகச் செய்திகள்

ஓராண்டுக்கு வெளிநாட்டு உளவு கப்பல்களுக்கு இலங்கை தடை

Share:

இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வருகின்றன.

அவை இலங்கை துறைமுகங்களில் நின்றுகொண்டு, ஆய்வுப்பணியில் ஈடுபடுகின்றன.

அடுத்த மாதம், மற்றொரு சீன ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. அதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்த வெளிநாட்டு உளவு கப்பலையும் இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதிப்பது இல்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

வருகிற ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்கு இம்முடிவு அமலில் இருக்கும்.

Related News