Jan 17, 2026
Thisaigal NewsYouTube
கனடாவில் மீண்டும் இந்துக் கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
உலகச் செய்திகள்

கனடாவில் மீண்டும் இந்துக் கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்

Share:

ஒட்டாவா, ஏப்ரல்.21-

கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றொரு லட்சுமி நாராயணன் இந்துக் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

கோவில் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களைச் சேதப்படுத்தி உள்ளனர். இந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்று கனடாவில் உள்ள இந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

Related News