காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு அடுத்தடுத்து இரு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நள்ளிரவு இரு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன. முதல் நில அதிர்வு நள்ளிரவு 12.28 மணிக்கு 80 கி.மீ ஆழத்தில் பைசாபாத்திலிருந்து கிழக்கு பகுதியில் 126 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது.
இதையடுத்து சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நில அதிர்வு உணரப்பட்டது. இது 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் தென் கிழக்கே 100 கி.மீ. தூரத்தில் ஏற்பட்டது.
அரை மணி நேரத்தில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகவும் இரண்டாவது நில அதிர்வு 4.8 ஆகவும் பதிவாகியிருந்தது.
இந்த நில அதிர்வுகளில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.