Oct 18, 2025
Thisaigal NewsYouTube
உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பால்சிங் பங்கா
உலகச் செய்திகள்

உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பால்சிங் பங்கா

Share:

உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019ம் ஆண்டு பதவியேற்ற 66 வயதுடைய டேவிட் மால்பாஸ், பதவி காலம் 2024ம் ஆண்டு நிறைவடைகிறது. இருப்பினும் முன்கூட்டியே பதவி விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோனை நடத்தியதில் சர்வதேச நிதி நிறுவனமான 'மாஸ்டர் கார்டு' நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.,வும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, உலக வங்கியின் அடுத்த தலைவர் பதவிக்கு ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.

உலக வங்கி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு விருப்ப மனு தாக்கல் செய்ய இறுதி நாள் கடந்த மார்ச் 29 முடிவடைந்து விட்டது. இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிட வேரு யாரும் இல்லாத பட்சத்தில் எனவே அஜெய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Related News

உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பால்சிங் பங்கா | Thisaigal News