Oct 19, 2025
Thisaigal NewsYouTube
திருப்பி அடித்த உக்ரைன்.. ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கொடூர தாக்குதல்.. 25 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

திருப்பி அடித்த உக்ரைன்.. ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கொடூர தாக்குதல்.. 25 பேர் உயிரிழப்பு

Share:

மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. குட்டி நாடுதானே.. அடித்து துவைத்து விடலாம் என எண்ணி இந்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தாலும், போரில் ரஷ்யாவுக்கு தண்ணி காட்டியது உக்ரைன்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவிகளையும் வழங்கியதால் ரஷ்யாவுக்கு கடும் பதிலடியை உக்ரைன் கொடுத்து வருகிறது. இதனால், உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் ரஷ்யா தடுமாறி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது.

இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்த நாட்டின் சில பகுதிகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளது

இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைனில் ரஷ்யா வசம் இருக்கும் டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் இந்த தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 25 பேர் கொல்லப்பட்டதோடு 10 பேர் காயமும் அடைந்துள்ளனர்.

Related News

திருப்பி அடித்த உக்ரைன்.. ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கொ... | Thisaigal News