Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை

Share:

மாஸ்கோ, ஆகஸ்ட்.03-

500 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவில் எரிமலையொன்று மீண்டும் சீறத் தொடங்கி உள்ளது, ஆச்சரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

கம்சட்காவில் கிராஷெனின்னிகோவ் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது கடைசியாக 15ம் நூற்றாண்டில் தான் சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியது. அதன் பிறகு எரிமலையின் சீற்றம் குறைந்து அமைதியாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 500 ஆண்டுகள் கழித்து இந்த எரிமலை தற்போது மீண்டும் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது. ஒரே இரவில், கிட்டத்தட்ட 6 கிலோமீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகை சூழ்ந்தது. எரிமலை வெடித்துச் சிதறியதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு இதே கம்சட்காவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் விளைவே இது. மேலும் பல எரிமலைகள் வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது என்று கால நிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

ரஷ்யாவில் 500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எர... | Thisaigal News