வாஷிங்டன்: உணவகம் ஒன்றில் ஒரு சின்ன பீஸ் ஸ்டீக் கறி ரூ.80,000, கூல் டிரிங்க்ஸ் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுவது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அது தொடர்பான போட்டோவும் டிரெண்டாகி வருகிறது.
இப்போது உலகில் டிரெண்டிங்கில் இருப்பது என்றால் அது உணவகங்கள் தான். விலையுயர்ந்த உணவகங்களுக்குச் சென்று அங்கு சாப்பிடுவதை வீடியோ எடுத்துப் போடுவது இப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இதனால் இதுபோன்ற உணவகங்களுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். இது மாதிரியான ஹோட்டகளில் பொதுவாக உணவு விலை அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரபல துருக்கி சமையல்காரர் நுஸ்ரெட் கோக்ஸி இதை அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.
உப்பால் பிரபலமான செஃப்: சர்வதேச அளவில் இணையத்தில் டிரெண்டிகில் இருக்கும் செஃப்களில் ஒருவர் நஸ்ரெட் கோக்சே.. ஸ்டீக் உணவில் இவர் தனித்துவமான முறையில் உப்பைத் தூவுவார். கையை கொக்கு போல மடக்கி வைத்து இவர் உப்பு தூவுவது இணையத்தில் டிரெண்டிங் ஆனது. கடந்த 2017இல் இந்த உப்பு போடும் வீடியோ வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தது. இதற்காகவே இவரை சால்ட் பே என்று இவரது ரசிகர்கள் அழைப்பார்கள். அதில் கிடைத்த புகழைக் கொண்டு அவர் நஸ்ர்-எட் என்ற விலையுயர்ந்த உணவகம் ஒன்றையும் ஆரம்பித்தார்.