கரகாஸ், ஜனவரி.04-
வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அமெரிக்காவுக்கு போதை பொருட்களைக் கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வெனிசுலாவில் 40 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிச் செய்தது. வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில், இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. ''வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்'' என இடைக்கால அதிபர் டெல்சி தெரிவித்துள்ளார்.








