இந்தோனேசியா, மார்ச் 21 -
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட திரு. அனீஸ் பஸ்வேடன் தேர்தல் முடிவுக்கு எதிராக அரசமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோ தேர்தலில் அமோக வெற்றிபெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
ஜக்கர்த்தாவின் முன்னாள் ஆளுநரான திரு. அனீஸ், ஜனநாயகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே வழக்குத் தொடுக்கப்பட்டதாகச் சொன்னார்.தேர்தலில் பல பிரச்சினைகள் இருந்ததாகவும் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தோல்வியை ஒப்புக்கொள்ளத் திரு. அனீஸ் மறுத்துவிட்டார்.தற்போதைய நிர்வாகம், நியாயமற்ற வகையில் தேர்தலில் செல்வாக்கைப் பயன்படுத்தியதாக அவரின் குழு குற்றஞ்சாட்டியது.ஆனால் அதிகாரிகள் அதனை நிராகரித்தனர்.