கிழக்குக் கரையோர ரயில் திட்டமான இசிஆர்எலை கிளந்தான், கோத்தா பாருவில் இருந்து ரந்தாவ் பாஞ்சாங் வரை நீட்டிக்கும் முன்மொழிவுக்கு சீனாவும் மலேசியாவும் உடன்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நீட்டிப்பு மூலம் மலேசியா–தாய்லாந்து இடையே நேரடி போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன், கிளந்தானின் உள்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என்று அன்வார் கூறினார்.
இந்த முன்மொழிவு தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னர், அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வரப்படும் என்று அன்வார் கூறினார்.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுலுடனான கலந்துரையாடலின் போதும் இந்த முன்மொழிவுக்கு சாதகமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கான மூன்று நாள் அலுவல் பயணத்தை முடித்த பின்னர், ஹாங்சோவில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய போதே பிரதமர் அன்வார் இதனைத் தெரிவித்தார்.








