துபாய், நவம்பர்.01-
துபாயில் உள்ள கஃபே ஒன்றில், ஒரு காபியானது 1000 அமெரிக்க டாலருக்கு, அதாவது மலேசிய மதிப்பில் 4,100 ரிங்கிட்டிற்கு இன்று சனிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றது.
உலகின் மிக விலையுயர்ந்த காபியாகக் கருதப்படும் இது, பனாமாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காபி விதைகளால் தயாரிக்கப்படுவதாக அதனை விற்பனை செய்யும் ஜுலித் கஃபே தெரிவித்துள்ளது.
செல்வ செழிப்பிற்குப் பெயர் பெற்ற துபாய் நாடு, உலகின் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர வணிக வளாகங்களைக் கொண்டது.
தங்களின் விலையுயர்ந்த காபியை விற்பனை செய்ய துபாய் மிகச் சரியான இடமாகத் தாங்கள் கருதுவதாக ஜுலித் கஃபேயின் இணை நிறுவனர் Serkan Sagsoz தெரிவித்துள்ளார்.
துபாய் தொழிற்துறை நகரமாக இருந்தாலும் கூட, தற்போது காபி ரசிகர்கள் அதிகம் கூடும் நகரமாக மாறியுள்ளதால், இன்று முதல் 400 கோப்பைகள் விற்பனை செய்யப்படும் என்றும் Serkan தெரிவித்துள்ளார்.








