Oct 21, 2025
Thisaigal NewsYouTube
எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
உலகச் செய்திகள்

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share:

எல்லையை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கூறி 11 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யும் நடவடிக்கை

இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த 11 பேருடன், அவர்கள் பயணித்த விசை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றது

அத்துடன் அண்மைக்காலத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது ஒரு இலங்கை கடற்படை உறுப்பினரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் பலியான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Related News