லியோன், ஆகஸ்ட்.25-
போதை மயக்கத்தில் இருந்தவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் புரிந்த ரகளையினால் விமானம் ஒன்று பாதி வழியிலேயே திரும்பியது. அந்த ஆடவர், விமானிகளின் அறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவரைக் கட்டுப்படுத்த இயலாமல் விமானம் U வளைவு எடுத்து திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான லியோன் விமான நிலையத்திலிருந்து போர்த்துகலை நோக்கி அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஆடவர் பின்னர் பயணிகளால் அடக்கக்கப்பட்டார். விமானம் பாதுகாப்பாக லியோன் விமான நிலையத்தில் திரும்பிய பின்னர் ஒரு போர்த்துக்கீசியரான 26 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஆடவர் போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.