Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ
உலகச் செய்திகள்

இரவை பகலாக்கிய விண்கல்: வைரல் வீடியோ

Share:

போர்ச்சுகல் , மே 20-

போர்ச்சுகல் நாட்டில் நிலவை விட பிரகாசமான ஒரு நெருப்பு பந்து விண்ணில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த வீடியோ வரலாகி வருகிறது

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விண்கல் காரணமாக பிரகாசமான நீல ஒளியால் ஒளிரும் வானம் இரவை பகல் போன்று மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் இணையவாசிகள் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“ஆஹா இது சுவாரசியமாக இருந்தது. மிகவும் பிரகாசமாக இருந்தது! நிறத்தை பார்க்கும்போது, அது மெக்னீசியத்தால் ஆனதாக தெரிகிறது.” என எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். “பச்சை பளபளப்பு விண்கற்களுடன் ஒத்துப்போகிறது.” என்று மற்றொரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 61,000 கிமீ வேகத்தில் நுழைந்த விண்கல் எவோரா மாவட்டத்தின் ஃபோரோஸ் டி வால்லே ஃபிகுரா பகுதியில் 91 கிமீ உயரத்தில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அந்த விண்கல் பாறை வடகிழக்கு நோக்கி நகர்ந்து கானோ பாரிஷ் மீது சுமார் 19 கிலோமீட்டர் உயரத்தில் சிதைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

விண்கற்கள் பொதுவாக விண்வெளியில் உருவாகின்றன. அவை பூமியின் மேற்பரப்பை அடையும் போது சிறிய துண்டுகளாக உடைகின்றன. அந்த துண்டுகள் வெவ்வேறு அளவுகளில் உடைந்து விழலாம். ஆனால், இப்போது விழுந்த விண்கல்லின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததாகவும், முதற்கட்ட ஆய்வில் விண்கல் முழுவதுமாக அழிக்கப்படவில்லை என்றும், அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது என்றும் கூறப்படுகிறது.

Related News