Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி
உலகச் செய்திகள்

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Share:

புதுடில்லி, ஆகஸ்ட்.20-

அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய பாதுகாப்பு படையினருக்குக் கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திக் கொண்டு 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.

‘ஏவுகணை சோதனை அனைத்து வகையிலும் வெற்றிகரமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் அளவீடுகள் சிறப்பாக இருந்தன. ஸ்ட்ராட்டிஜிக் போர்சஸ் கமாண்ட் எனப்படும் ராஜதந்திர படைத்தலைமை மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டதாக' மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அக்னி 5 என்பது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையாகும். இது, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏவுகணையானது மூன்று நிலைகளைக் கொண்டது. சாலை மூலமாக வாகனங்களில் கொண்டுச் செல்லும் வசதி கொண்டது. திட எரிபொருளைக் கொண்டு இயக்கப்படுவதாகும். உலகின் அதிவேகமான ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணை வினாடிக்கு 29 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை