Oct 20, 2025
Thisaigal NewsYouTube
'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்
உலகச் செய்திகள்

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Share:

அமெரிக்கா, ஜூலை 23-

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Related News