Aug 7, 2026
Thisaigal NewsYouTube
அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை
உலகச் செய்திகள்

அர்ஜென்டினாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: வெளிநாட்டினருக்குத் தடை விதிக்க அதிபர் சவியர் மிலெய் நடவடிக்கை

Share:

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு தங்களுக்கு எதிராக எழுந்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் விரோதப் போக்குகளைத் தொடர்ந்து, அர்ஜென்டினா நாட்டிற்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யவோ அல்லது வெளியேற்றவோ வழிவகை செய்யும் அவசரச் சட்டத்தில் அதிபர் சவியர் மிலெய் கையெழுத்திட்டுள்ளார்.

அர்ஜென்டினா மக்கள் மீது வன்முறை, பாகுபாடு அல்லது வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்படும் வெளிநாட்டினரின் நுழைவுரிமையை ரத்து செய்யவும், அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றவும் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு முழு அதிகாரமளிக்கிறது. மேலும், நாட்டின் தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் மீதும் இந்த அதிரடி நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் புலம்பெயர் மக்களை அரவணைத்து வந்த அர்ஜென்டினா நாட்டின் கொள்கைக்கு இது ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. எனினும், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேசியப் பெருமையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Related News

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்