தமிழகம், அக்டோபர்.10-
இந்தியாவில் சுமார் 20 குழந்தைகள் உயிரிழக்கக் காரணமான இருமல் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அந்நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தில், நச்சுத்தன்மை இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்குப் பிறகு, ஸ்ரீசன் நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது.
இதனிடையே, தமிழகத்தில் கைது செய்யப்பட்ட நிறுவன உரிமையாளர் ரங்கநாதன், மேல் விசாரணைக்காக மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்படுவார் என்றும் தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.